/

சத் பூஜை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

சத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
Updated On :27 ஜனவரி 2024, 5:54 pm

DIN


சத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சத் பூஜை புனிதப் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து சக மக்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சத் பூஜை அன்று சூரியக் கடவுளை வழிபடும் பாரம்பரியம் உள்ளது. மேலும் ஆறுகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களுக்கு மரியாதை செலுத்தி இயற்கை அன்னைக்கும் மக்கள் நன்றி கூறி வணங்குவர்.

சத் பூஜை புனிதப் பண்டிகை அன்று, இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும், கொவைட்-19 பரவலை மனதில் கொண்டு கொண்டாடவும் நாம் உறுதி ஏற்போம். சத் பூஜை அனைத்து மக்களையும் நல்ல ஆரோக்கியம் மற்றும் வளங்களோடு ஆசீர்வதிக்கட்டும், என்று தனது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.