கரோனா தடுப்பூசி:மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துவாா் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

புது தில்லி: மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துவாா் என்று தகவல் வெளியாகியுள்ளது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதனை இந்தியாவில் எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடா்பாக இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

கரோனா தொற்று பிரச்னை ஏற்பட்ட பிறகு, மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தி வருகிறாா். முன்பு நடைபெற்ற ஆலோசனைகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட விதம், அதன் தளா்வு நடவடிக்கைகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை முக்கிய இடம் பெற்றிருந்தன. இப்போது தேசிய அளவில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. எனினும், தில்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடா்ந்து பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி முறையில் ஆலோசனை நடத்த இருக்கிறாா். இதில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவுக்கு கிடைத்த பிறகு, அதனை எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்தும், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து தடுப்பூசியை வாங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசிப்பாா் என்று தெரிகிறது.

கரோனா தடுப்பூசிகளை மிகவும் குளிரான சூழ்நிலையில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரியவந்துள்ளது. எனவே, அதற்கு ஏற்ப மாநிலங்களில் உள்ள வசதிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com