சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தீவிர புயலானது நிவர்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2020, 10:56 pm

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இரவு 11.30 மணி நிலவரப்படி, கடலூருக்கு 310 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 380 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ள இந்த தீவிர புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி, 6 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

இது அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 155 கி.மீ வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் புயல் கரையை கடக்கும் போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஆதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.