இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

தெலங்கானாவில் இன்றைய கரோனா பாதிப்பு 862

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image

Telangana reports 862 new COVID-19 cases, 3 deaths

Updated On :26 நவம்பர் 2020, 7:29 am

ANI

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 862 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,66,904 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,444ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,54,676 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 95.41 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 41,101 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.