மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பிர்காத் ஹக்கிம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு தன்னார்வலராக விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்' நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் இருந்து வருகிறது.
தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பிர்காத் ஹக்கிம் தன்னார்வலராக முன்வந்துள்ளார்.
நான் மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். எனது இந்த பங்களிப்பின் மூலமா மக்களுக்கு சிகிச்சையளிக்க முடிந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருக்கும் ஹக்கிம், தனது இந்த விருப்பம் குறித்து அதிகாரிகளுடன் பேசியுள்ளார். இதையடுத்து விரைவில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வர்.
மேற்குவங்கத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
டிரம்ப்புடன் அம்பானியின் ரிலையன்ஸ்: அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

