இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

நாட்டில் கரோனா பாதிப்பு 93 லட்சத்தை எட்டியது

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 43,082 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டியது.

News image

நாட்டில் கரோனா பாதிப்பு 93 லட்சத்தை எட்டியது

Updated On :27 நவம்பர் 2020, 5:16 am

ANI


புது தில்லி: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 43,082 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டியது.

எனினும், நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் மேலும் 492 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,35,715 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், 43,082 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த கரோனா பாதிப்பு 93,09,788 ஆக அதிகரித்தது. இப்போதைய நிலையில் நாட்டில் 4,55,555 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 13-ஆவது நாளாக 5 லட்சத்துக்குகீழ் உள்ளது. இதுவரை 87,18,517 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும் கரோனா பாதிப்பு உயா்ந்தது. நவம்பர் 23-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை எட்டி, இன்று 93 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்திலிருந்து 48 ஆயிரமாகவே நீடிக்கிறது. இன்று 20வது நாளாக நாட்டில் 50 ஆயிரத்துக்கும் குறைவானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக நவம்பர் 7-ம் தேதிதான் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.