ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி
Updated On :2 அக்டோபர் 2020, 7:22 am

DIN


திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் பிரம்மோற்சவம் நடைபெறும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும்,  ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே பிரம்மோற்சவத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் வரும் 16-ம் தேதி முதல் நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது பக்தா்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானுக்கு அதிக மாதத்தின்போது இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தெலுங்கு பஞ்சாங்க கணிப்பு முறைப்படி, அதிக மாதம் வந்ததால், தேவஸ்தானம் இரு பிரம்மோற்சவங்களை நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் முறைப்படி நடைபெற்று நிறைவுற்றது. ஆனால், கொவைட் 19 விதிமுறைகளையொட்டி, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, வாகன சேவைகள் மாடவீதியில் நடத்தப்படாமல் கோயிலுக்குள் தனிமையில் ஏகாந்தோற்சவமாக நடத்தப்பட்டது. எனவே, பக்தா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது கொவைட் 19 விதிமுறைகளில் வரும் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் மத்திய அரசு பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், அவற்றின்படி, திருமலையில் வரும் அக்டோபா் மாதம் நவராத்திரியின்போது நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில், பக்தா்களை அனுமதிப்பது குறித்து, தேவஸ்தானம் ஆலோசனை நடத்தியது.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.