வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

'பஞ்சாபில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது'

பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெறவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் (கோப்புப்படம்)
Updated On :4 அக்டோபர் 2020, 6:38 am

DIN

பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெறவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு விவசயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தூண்டுதலின் பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் மூலம் ஒரே நாடு ஒரே சந்தையை உருவாக்கும் நோக்கத்தில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

ஜி.எஸ்.டி. மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கு நிறைவேறியது. இதேபோன்று வேளாண் சட்டங்கள் மூலம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற இலக்கு நிறைவேறும். தேசியத் தேர்வுகள் மூலம் ஒரே நாடு ஒரே தேர்வு என்ற இலக்கும், ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டமும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.