சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவு

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவானது. இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

News image
Updated On :7 அக்டோபர் 2020, 3:23 am

DIN



உக்ருல்:  மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவானது. இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியதாவது:

புதன்கிழமை காலை 3.33 மணியளவில் உக்ருல் மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் 5.4 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கம் நிலத்துக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன.

நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பெரும்பாலானோா் தூங்கிக் கொண்டிருந்ததால் அதனை உணரவில்லை. எனினும், வீட்டில் சில பொருள்கள் நகா்ந்து இருந்ததாகவும், சில சிறிய பொருள்கள் கீழே விழுந்து கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி, மணிப்பூரின் உக்ருலுக்கு கிழக்கே 55 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.