மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசா: ராஜ்பவன் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

ஒடிசாவில் ராஜ்பவன் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
ஒடிசா: ராஜ்பவன் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி
Updated On :8 அக்டோபர் 2020, 7:22 am

DIN

ஒடிசாவில் ராஜ்பவன் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ராஜ்பவன் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீர்களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் தீ விபத்தில் சிக்கி 9 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறை ஆணையர் சாரங்கி தெரிவித்திருந்தார். 

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர்.

இதில் 60 சதவிகித தீக்காயங்களுடன் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதுடைய சத்யா நாயக் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ரிபு தாமன் என்ற 40 வயதுடைய மற்றொரு நபர் லக்னெள மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 72 மணிநேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் விற்பனை நிலையத் தீ விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.