மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புயல் காலத்தை சந்திக்கத் தயார் நிலை: இந்திய வானிலை மையம்

புயல் பாதிப்புகளை குறைக்கும் விதத்தில், சக்தி வாய்ந்த புயல் எச்சரிக்கைக் கருவியை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுன்ஜெய் மொகபத்ரா கூறியுள்ளார்.

News image
புயல் காலத்தை சந்திக்கத் தயார் நிலை: இந்திய வானிலை மையம்
Updated On :8 அக்டோபர் 2020, 8:54 am

DIN


புது தில்லி: புயல் பாதிப்புகளை குறைக்கும் விதத்தில், சக்தி வாய்ந்த புயல் எச்சரிக்கைக் கருவியை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுன்ஜெய் மொகபத்ரா கூறியுள்ளார்.

உலக விண்வெளி வார கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘புயல்களை துரத்துதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு இந்தியத் தொலை உணர்வு சங்கத்தின் தில்லி பிரிவு கடந்த 6-ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பேசிய மருத்துவர் மொபத்ரா, உலகம் முழுவதும் புயல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் புயல் பாதிப்புகளை குறைக்க ஆற்றல் மிக்க புயல் எச்சரிக்கை கருவி, விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த புதிய புயல் எச்சரிக்கை கருவி, மாவட்ட வாரியாக துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் எனவும், இவைகள் பேரிடர் நிர்வாக அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் மொகபத்ரா கூறினார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்பு, அக்டோபர் - டிசம்பர் புயல் காலத்தை எதிர்கொள்வது குறித்த ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தை இந்திய வானிலை மையம் நடத்தியது. இதில் புயல் காலத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், தயார் நிலை குறித்து வானிலை நிபுணர்கள், பேரிடர் குழுவினர், விமானப்படை மற்றும் கடற்படையினர்  உட்பட அனைத்து தரப்பினருடனும் மொகபத்ரா ஆய்வு செய்தார். புயல் பற்றிய அனைத்து அம்சங்கள் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.