அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: வரதட்சிணைக் கொடுமையால் மனைவி கொலை

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சிணைக் கொடுமையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 அக்டோபர் 2020, 10:46 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சிணைக் கொடுமையால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படான் பகுதியில் ராம்பரான் என்பவருக்கும், பர்வேஷ் குமாரி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின்போது ராம்பரான் வீட்டிற்கு 6 லட்ச ரூபாய் வரதட்சிணையாக வழங்கப்பட்டுள்ளது. எனினும் திருமணமான சில மாதங்களில் மேலும் இரண்டு லட்சம் கேட்டு ராம்பரான் அடிக்கடி தமது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று சனிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் 23 வயதான தமது மனைவி பர்வேஷ் குமாரியை கொலை செய்துள்ளார்.

இது குறித்து  பர்வேஷ் குமாரியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவானக் கணவனைத் தேடிவருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.