உ.பி.யில் புதிதாக 3,348 பேருக்கு கரோனா; மேலும் 41 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 3,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,979-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 40,019 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 18,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவிலிருந்து 3,90,566 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைவோர் விகிதம் 89.37 சதவிகிதமாக உள்ளது.
புதிதாக 48 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,348-ஆக அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மட்டும் 1.72 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.18 கோடியாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...