எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தவறவிட்ட மாணவர்களுக்கு அக். 14ல் நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
நீட் தேர்வு(கோப்புப்படம்)
Updated On :12 அக்டோபர் 2020, 7:45 am

DIN

நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர் தேர்வினை எழுத முடியவில்லை. எனவே, கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கில், நீட் தேர்வை எழுதத் தவறிய மாணவர்களுக்கு அக். 14 ஆம்  தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடந்த செப். 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என கூறப்படும் நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி தேர்வு முடிவினை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

எனினும், தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.