உ.பி.: மீண்டும் பட்டியலினப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
ஹாத்ரஸ் வன்கொடுமையைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பட்டியலினத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


ஹாத்ரஸ் வன்கொடுமையைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பட்டியலினத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள மெளராணிபூர் பகுதியை சேர்ந்த 21 வயது பட்டியலினப் பெண்ணிடம் நரேந்திர சாஹு மற்றும் சஷாம் சிரோதியா ஆகியோர் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், இளம்பெண்ணின் கிராமத்தை சேர்ந்த நபர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது பள்ளி மேலாளருடன் இணைந்து பெணணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் பதிவாகியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், இருவர் மீதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...