அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: பாலியல் வன்கொடுமையால் மேலுமொரு பட்டியலினப் பெண் கொலை

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலினப் பெண்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
உ.பி.: பாலியல் வன்கொடுமையால் மேலுமொரு பட்டியலினப் பெண் பலி (கோப்புப்படம்)
Updated On :16 அக்டோபர் 2020, 8:07 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலினப் பெண்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு அதேபோன்று வயலுக்குச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் வயல்வெளிக்குச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளம்பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதில் இளம்பெண் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், கொல்லப்படுவதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாத்ரஸ்  பகுதியில் 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தினரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.