மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தெலங்கானா வெள்ளம்: ரூ.1.5 கோடி நிதியுதவி அறிவித்த நடிகர் பிரபாஸ்

தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்.

News image
நடிகர் பிரபாஸ்
Updated On :21 அக்டோபர் 2020, 2:37 pm

DIN

தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார். 

கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது.இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இந்நிலையில் வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அவர் குரறிப்பிட்டுள்ளார். முன்னதாக நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் ரூ.1 கோடியும், நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.