தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாப்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை

பஞ்சாபில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதியவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 அக்டோபர் 2020, 7:57 am

DIN

பஞ்சாபில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதியவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தமது தாத்தா சுர்ஜித் சிங் உதவியுடன் சிறுமியை வீட்டிலேயே எரித்துள்ளார். 

இந்த நிலையில் பாதி எரிந்த உடலை சிறுமியின் தந்தை மீட்டுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு   முன்னுதாரணமாக விளங்கும் வகையில் குற்றவாளிகளுக்குத் தண்டனைவழங்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைந்து விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.