டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

முன்களப் படைகளைக் கட்டுப்படுத்தவும்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

​எல்லையில் சீனப் படைகளின் சமீபத்திய ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை சீனத் தரப்பிடம் எடுத்துச் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 செப்டம்பர் 2020, 10:33 pm IST


எல்லையில் சீனப் படைகளின் சமீபத்திய ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை சீனத் தரப்பிடம் எடுத்துச் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்ததாவது:

"சமீபத்திய ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை தூதரக மூலமாகவும், ராணுவம் மூலமாகவும் சீனத் தரப்பிடம் எடுத்துச் சென்றுள்ளோம். இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனாவின் முன்களப் படைகளை ஒழுங்குபடுத்தியும் கட்டுப்படுத்தியும் வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பிரச்னைகளையும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியா-சீன எல்லையில் நிலவும் சூழலை கடந்த 3 மாதங்களாக இரு நாடுகளும் தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  

இந்தப் புரிதல்களை மீறும் வகையில், ஆகஸ்ட் 29/30 இரவில் சீனத் தரப்பு ஆத்திரமூட்டும் வகையில் ராணுவ சூழ்ச்சியில் ஈடுபட்டது.  

இந்திய ராணுவம் நேற்று குறிப்பிட்டதைப்போல், சீனத் தரப்பின் செயலுக்கு இந்தியத் தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டது. பிராந்திய ஒருமைப்பாட்டையும், நமது நலன்களையும் பாதுகாக்க இந்தியத் தரப்பில் உகந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஆகஸ்ட் 31-ம் தேதி பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக இருநாட்டு படைத் தளபதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும், சீனப் படைகள் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால், ஒருதலைபட்சமாக நிலைமையை மாற்றும் முயற்சி இந்தியத் தரப்பால் முறியடிக்கப்பட்டது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.