ஹரியாணா: செப்டம்பர் இறுதியில் பல்கலை. பருவத் தேர்வுகள்
ஹரியாணாவில் செப்டம்பர் மாத இறுதியில் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹரியாணாவில் செப்டம்பர் மாத இறுதியில் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஹரியாணா மாநில உயர்கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் கிஷோர் குடியாலா, தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்பு வழங்கப்படும். தேர்வு எழுதும்போது கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம், கிருமிநாசினி போன்றவை வழங்கப்படும், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்று கூறினார்.
அனைத்து தேர்வுகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தேர்வறை கண்காணிப்பாளருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். மருத்துவ காரணங்கள், தொலைதூரம், தனிமைப்படுத்தல் போன்ற காரணங்களுக்காக இம்மாதத்தில் தேர்வு எழுதமுடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
ஹரியாணாவில் உள்ள பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 2 லட்சம் இறுதியாண்டு மாணவர்கள் பருவத் தேர்வை எழுத உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...