விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோயிலுக்கு தற்போது வர வேண்டாம்: தமிழக பக்தர்களுக்கு திருப்பதி கோயில் அறிவிப்பு

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் யாரும் தற்போது கோயிலுக்கு வர வேண்டாம் என திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 செப்டம்பர் 2020, 12:14 pm

DIN

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் யாரும் தற்போது கோயிலுக்கு வர வேண்டாம் என திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆந்தர மாநிலத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது திருப்பதி கோயிலில் இணையம் மூலம் ஏற்கெனவே முன்பதிவு செய்த பக்தர்களை இறை வழிபாட்டிற்காக அனுமதிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. 

இந்நிலையில் எதிர்வரும் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என்பதால் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவோ அல்லது இன்ன பிற போக்குவரத்து முறைகளிலோ கோயிலுக்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வரை திருப்பதி கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.