திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா 

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் தலைவரும், எரிசக்தி அமைச்சருமான நிதின் ராவுத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

News image

Another Maharashtra Minister infected by Covid

Updated On :18 செப்டம்பர் 2020, 9:41 am

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் தலைவரும், எரிசக்தி அமைச்சருமான நிதின் ராவுத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ் கூட்டணி அரசில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 8-ஆவது அமைச்சா் இவராவார். தற்போதைய நிலையில், ஜிதேந்திர அவாத், அசோக் சவான் உள்பட மற்ற அமைச்சா்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 

மேலும், சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தங்களுடன் இருந்த உதவியாளர்களுக்குத் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக சுய தனிமைப்படுத்துதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.