திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா நோயாளிகள் பயணம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறக்கத் தடை விதித்தது துபை

கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளியை துபைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்த காரணத்தால், இந்தியாவில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபை விமானப் போக்குவரத்துத் துறை தடை வி

News image

கரோனா நோயாளிகள் பயணம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறக்கத் தடை விதித்தது துபை

Updated On :18 செப்டம்பர் 2020, 6:27 am

கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளியை துபைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்த காரணத்தால், இந்தியாவில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபை விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து துபைக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை 15 நாள்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 18 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் துபைக்கு அக்டோபர் 2-ம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து துபாய் சென்ற விமானங்களில்  கரோனா பாதித்த 2 பேர் பயணம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூர் - துபை சென்ற விமானத்தில் பயணித்த பயணி, கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.