அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குற்றச் செயல்களைத் தடுக்க சிறை ஊழியர்களின் உடலில் கேமரா பொருத்த ஏற்பாடு

ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்கள் உடலில் கேமராவை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 செப்டம்பர் 2020, 5:55 am

DIN

ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்கள் உடலில் கேமராவை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. 

சிறையில் ஊழியர்கள் மூலமாக மொபைல் போன், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கைதிகளுக்கு கிடைக்கிறது. மேலும், இதன் விளைவாக சிறையில் வன்முறை குற்றச் செயல்கள், போதைப் பழக்கங்கள், தற்கொலை ஆகியவை நிகழ்கின்றன.

எனவே,  ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சிறை ஊழியர்கள் பணியின்போது தங்கள் உடல்களில் கேமராக்களை பொருத்தியிருக்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. 

முதற்கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறைகளுக்கு ரூ. 80 லட்சம் வழங்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

கைதிகள் மற்றும் ஊழியர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேமராவில் பதிவான காட்சிகளை சிறை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்து அதனை ரகசியமாக பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிறைகளில் பல்வேறு குற்றச் செயல்களை அடையாளம் காணவும் இது உதவும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.