கேரளத்தில் நிலவும் கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
"கேரளத்தில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்துள்ளனர், 20 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,79,922 ஆக உயர்ந்துள்ளது. இதில் 697 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.59 சதவிகிதமாக உள்ளது.
கரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.
மாநிலத்தில் நிலவும் கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


