உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமையில் உண்மைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 14-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
இதில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, ''இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன. மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது'' என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


