இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி: -23.9% ஜிடிபி

​இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை பெரும் வீழ்சசியடைந்துள்ளது. மத்தியப் புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. 
இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி: -23.9% ஜிடிபி


இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்தியப் புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. 

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. முதல் காலாண்டு தொடக்கத்தில் 3.1 சதவிகிதமாக இருந்த ஜிடிபி, கரோனா பொது முடக்கம் காரணமாக இந்தப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தக் காலாண்டோடு ஒப்பிட முடியாது என்றாலும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1996-இல் காலாண்டு ஜிடிபி விவரங்களை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, இதுதான் மிகவும் மோசமான வீழ்ச்சியாகும். மேலும் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மோசமான சரிவாக இது அமைந்துள்ளது. 

ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் ரஷியாவின் பொருளாதாரம் -8.5 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. ஆனால், சீனா 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனாவில் கரோனா உச்சத்திலிருந்த ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் -6.8 சதவிகிதத்துக்கு சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com