வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி: எந்தத் துறையில் எத்தனை சதவிகிதம் சரிவு?

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிவைச் சந்திக்காத ஒரே துறையாக வேளாண் துறை ஜொலித்துள்ளது.
வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி: எந்தத் துறையில் எத்தனை சதவிகிதம் சரிவு?


2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிவைச் சந்திக்காத ஒரே துறையாக வேளாண் துறை ஜொலித்துள்ளது.

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இந்தப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மோசமான சரிவாக இது அமைந்துள்ளது. 

ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வேளாண் துறை மட்டுமே பொருளாதாரத்தில் ஜொலித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் வேளாண் துறை 3.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. வர்த்தகம், விடுதிகள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புத் துறை 47 சதவிகிதம் சரிந்துள்ளது. உற்பத்தித் துறை 39.3 சதவிகிதமும், கட்டுமானத் துறை 50.3 சதவிகிதமும் சுருங்கியுள்ளன. மின்சாரம் மற்றும் எரிவாயு துறை 7 சதவிகிதம் சரிந்துள்ளன. 

முன்னதாக, 2-வது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவைச் சந்திக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com