எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேரவைத் தலைவர் நோட்டீஸ்: பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு மீது மாலை விசாரணை

சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிரான பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு, இன்று மாலை விசாரிக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஜூலை 2020, 1:04 pm

DIN


சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிரான பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு, இன்று மாலை விசாரிக்கப்படவுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு மாநில பேரவைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.

பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பைலட் தரப்பு சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, மனுதாரர்கள் மனுவில் திருத்தம் செய்ய விரும்புவதால், அவகாசம் கோரி வாதாடினார். இதற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

மாலை 5 மணிக்கு இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பைலட் தரப்பின் திருத்தம் செய்யப்பட்ட மனு இன்று மாலை 7.30 மணியளவில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.