இந்தியாவை அச்சுறுத்தும் கரோனா: புதிதாக 8,392 பேருக்கு பாதிப்பு; 230 பேர் பலி

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு கடந்த ஒரு சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 8,392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு கடந்த ஒரு சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 8,392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், கரோனா பாதித்து 230 பேர் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 5,394-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,90,535-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 93,322 போ் சிகிச்சையில் உள்ளனா். 91,819 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 47 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். 

மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2286போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 1,038 பேரும் தில்லியில் 473 பேரும் மத்திய பிரதேசத்தில் 350 பேரும் மேற்கு வங்கத்தில் 317 பேரும் உத்தர பிரதேசத்தில் 213 பேரும் ராஜஸ்தானில் 194 பேரும் தெலங்கானாவில் 82 பேரும் ஆந்திரத்தில் 62 பேரும் கா்நாடகத்தில் 51 பேரும் பஞ்சாபில் 45 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 28 பேரும் பிகாரில் 21 பேரும் கேரளத்தில் 9 பேரும் ஒடிஸாவில் 7 பேரும் ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், உத்தரகண்டில் தலா 5 பேரும் சண்டீகா், அஸ்ஸாமில் தலா 4 பேரும் மேகாலயம், சத்தீஸ்கரில் தலா ஒருவரும் பலியாகினா்.

கரோனாவால் உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களாவா்.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 67,655 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 19,844 போ், தமிழகத்தில் 22,333 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com