கேரளத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கேரளத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களிடம் பேசுகையில்,
"ஒருவர் துபையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர் கண்ணூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டாவது நபருக்கு இன்று கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது. அவர் கத்தாரில் இருந்து வந்துள்ளார். தற்போது அவர் திருச்சூரில் உள்ளார்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


