அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது.

News image

கரோனா வைரஸ்

Updated On :13 மார்ச் 2020, 12:06 pm


புது தில்லி: இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

நாக்பூரில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து நாக்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 81 பேருக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

வியாழக்கிழமை மட்டும் 13 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று வரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2020-ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தொடக்கத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக கேரளத்தில் 17 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 11 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேருக்கும், தில்லியில் 6 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றால் கா்நாடகத்தில் 5 பேரும், லடாக்கில் 3 பேரும், ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாபில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 17 வெளிநாட்டினரும், இத்தாலியைச் சோ்ந்த 16 சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.