உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழும் இருளை விரட்டியடிப்போம்! மு.க. ஸ்டாலின் உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழும் இருளை விரட்டியடிப்போம்! மு.க. ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலையில் தங்கம்! வெள்ளி விலையிலும் மாற்றமில்லை!சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம்!தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி காலமானார்

பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியான தாதி ஜானகி காலமானார். அவருக்கு வயது 104.

News image
Updated On :27 மார்ச் 2020, 4:28 pm IST


மௌண்ட் அபு: பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியான தாதி ஜானகி காலமானார். அவருக்கு வயது 104.

ராஜஸ்தானின் மௌண்ட் அபுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாதி ஜானகி இன்று அதிகாலை 2.10 மணியளவில் காலமானார்.

அவர் கடந்த இரண்டு மாதங்களாக மூச்சுத் திணறல் மற்றும் வயிறு சம்பந்தமான உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

உலகம் முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு, தொடர்ந்து ஆன்மிகப் பணிகளை செய்து வந்த தாதி ஜானகி, இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராகவும் பணியாற்றியவர்.

ராஜஸ்தானில் உள்ள பிரம்மகுமாரிகள் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தாதி ஜானகியின் உடல், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் மத்திய அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, தாதி ஜானகியின் இறுதிச் சடங்குகளை பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.