ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே குளத்தில் மூழ்கி 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி புதன்கிழமை பலியானார்.
வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்த போது எதிர்பாராதமாக ஏழுமலை -அம்மு தம்பதியர்களின் மூத்த மகள் 12-ஆம் வகுப்பு பயிலும் யாமினி (17) என்பவர் ஆழத்தில் சிக்கி பலியானார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததோடு இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Regarding the death of a 12th school student who drowned in a pond near Walajapet...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









