தில்லியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு தில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று(ஜூன் 3) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காலை 9.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. சுமார் 8.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வேகமாகப் பரவியதால் தீயை அணைக்கவும் தீயில் சிக்கியவர்களை மீட்கவும் சற்று தாமதம் ஏற்பட்டது.
இதுவரை இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மொத்தமாக 47 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டடத்தின் தரைத் தளத்தில் உணவகம் இயங்கி வந்துள்ளது. ஒரு அடித்தளம்(basement), தரைதளத்துடன் 5 தளங்கள் இருந்தன. தீ விபத்தினால் பலர் மாடியில் இருந்து குதித்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Summary
Delhi: A fire broke out at Restaurant in Malviya Nagar. 21 people dead in fire
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







