விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.


விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு அங்கு 3 கி.மீ. தூர சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களுக்குப் பரவியது. இந்த விபத்தில் முதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இருக்கும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...