இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
12,20,711 corona tests in the last 24 hours in India: ICMR
12,20,711 corona tests in the last 24 hours in India: ICMR

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆா் வெளியிட்ட தகவில், 

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 47,638 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 84,11,724-ஆக அதிகரித்தது. 

மேலும் ஒரேநாளில் 54,157 போ் குணமடைந்த நிலையில், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 77,65,966-ஆக அதிகரித்துள்ளது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 670 போ் உயிரிழந்ததை அடுத்து, இதனால் நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,24,985-ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,20,773 ஆக உள்ளது. 

இந்தியாவில் கரோனா பரிசோதனை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com