ஆந்திர மாநிலத்தில் இதுவரை 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் ஒரு சில மாநிலங்களில் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆந்திரத்தில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் தொடங்கி 4 நாள்களில் 575 மாணவர்களுக்கும் 829 ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலில், 1.89 லட்சம் அரசுப்பள்ளிஆசிரியர்களில்இதுவரை 70,790 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 829 பேருக்கு தொற்று உறுதி ஆக்கியுள்ளது. அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி பகுதியில் 172 ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து ஆசிரியர் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.
மாணவர்களைப் பொருத்தவரையில் 95,763 மாணவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்னவீரபத்ருது, 'கரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவே' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெறித்த ஆர்சிபி கேப்டன்!

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


