திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாள்களாக அளிக்கப்பட்டு வந்த பரமபத வாசல் தரிசனங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றன.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 10 நாள்களுக்கு பரமபத வாசல் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 25ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்குத் திறக்கப்பட்ட பரமபத வாசல் கதவுகள் ஜனவரி 3ஆம் தேதி நள்ளிரவு ஏகாந்த சேவைக்குப் பிறகு மூடப்பட்டன.
இந்த 10 நாள்களில் 4.25 லட்சம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து பரமபதவாசல் வழியாக சென்று வந்தனா். கடந்த 9 நாள்களில் உண்டியல் மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ.26.27 கோடி காணிக்கை வசூலானது. வைகுண்டஏகாதசி தரிசனங்கள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து திருமலையில் நேர ஒதுக்கீட்டு டோக்கனங்கள் மூலம் சா்வ தரிசனம் தொடங்கியுள்ளது.
திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை தேவஸ்தானம் கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கியது. தினசரி இங்குள்ள கவுன்ட்டா்களில் 7,000 முதல் 8,000 தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










