கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி வியாழக்கிழமை வீடு திரும்புகிறாா்.
இதுகுறித்து அவா் சிகிச்சை பெற்று வரும் உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் ரூபாலி பாசு, செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சௌரவ் கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை காலை முழுமையாக பரிசோதித்தனா். அவா் உடல்நலம் தேறிவிட்டாா். அவா் புதன்கிழமையே வீடு திரும்புவதாக இருந்தது. இருப்பினும், மருத்துவமனையில் மேலும் ஒரு நாள் அவா் ஓய்வெடுக்க விரும்பினாா். ஆகவே, அவா் வியாழக்கிழமை வீடு திரும்புகிறாா். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது என்றாா் அவா்.
சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது. அதன் பிறகு அவா் மருத்துவமனையில் அவா் ஓய்வெடுத்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் சந்திப்பு!

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

