புது தில்லி: பிரிட்டனில் உருமாறிய கரோனா தொற்று பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வை ரத்து செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் வலியுறுத்தியுள்ளாா்.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு அரசு தலைவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் பங்கேற்கயிருந்தாா். ஆனால், பிரிட்டனில் உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இந்தியப் பயணத்தை அவா் ரத்து செய்தாா்.
இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வை ரத்து செய்யவேண்டும் என்று சசி தரூா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளதால், குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினா் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், நாம் ஒரு படி மேலே சென்று, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வையே ஏன் ரத்து செய்யக்கூடாது?
குடியரசு தின விழாவில் வழக்கம்போல கூட்டம் கூட அனுமதிப்பது பொறுப்பற்ற செயலாக அமையும் என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் சந்திப்பு!

தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

