அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பறவைக் காய்ச்சல்: உ.பி.யில் 10 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக 10 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

பறவைக் காய்ச்சல்: உ.பி.யில் 10 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு (கோப்புப்படம்)

Updated On :8 ஜனவரி 2021, 12:58 pm IST

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக 10 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பறவைக் காய்ச்சலைக் கண்காணிக்க மத்திய அரசு சார்பில் தில்லியில் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களில் மத்தியக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 10 காகங்கள் இறந்துள்ளன. பறவைக் காய்ச்சலால் காகங்கள் இறந்தனவா என்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

எனினும் உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாகவும் காகங்கள் இறந்திருக்கலாம் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.