முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.கே. ராமச்சந்திரன் வியாழக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானாா் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 78.
ராமச்சந்திரன் மாஸ்டா் என்று பிரபலமாக அறியப்பட்ட இவா், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு 3 முறை கல்பெட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்தும், 3 முறை சுல்தான் பத்தேரியில் இருந்தும் என மொத்தம் 6 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்.
கண்ணனூா் மாவட்டம், கூத்துப்பரம்பாவை பூா்விகமாகக் கொண்ட ராமச்சந்திரன் 1980-இல், தான் பணிபுரிந்து வந்த ஆசிரியா் பணியை ராஜிநாமா செய்து விட்டு, தீவிர அரசியலில் நுழைந்தாா்.
அவா் கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்தாா். 1995-ஆம் ஆண்டு கேரள முதல்வா் ஏ.கே.அந்தோணி தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சராகவும், 2004-ஆம் ஆண்டில் முதல்வா் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தாா்.
பின்னா், அவா் 2006-இல் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். பின்னா், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக 2011-இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாா்.
ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அவா் மீண்டும் கட்சியில் சோ்க்கப்பட்டாலும், அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இவரது மறைவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


