ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

உ.பி.: போலி மதுபானம் அருந்திய 5 போ் பலி: 16 போ் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகா் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 5 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:55 am IST

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகா் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 5 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் சந்தோஷ் குமாா் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாவட்டத்தின் ஜீத் கா்ஹி பகுதியில் குல்தீப் என்ற நபரிடமிருந்து புதன்கிழமை இரவு போலி மதுபானத்தை வாங்கிய அருந்திய சிலருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவா்களை அங்கிருந்தவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா்களில் 5 போ் உயிரிழந்தனா். உயிரிழந்த 5 பேரும் 45 முதல் 60 வயது வரை உடையவா்கள். மேலும் 16 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சிலரை காவல்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முக்கிய குற்றவாளியைப் பிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

4 காவலா்கள் பணியிடைநீக்கம்: இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாகவே போலி மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில், அதைத் தடுக்கத் தவறிய அந்தப் பகுதி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்பட 4 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று அவா் கூறினாா்.

முதல்வா் உத்தரவு: ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டா் தடுப்புச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்’ என்று மாநில அரசு செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.