அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

விமான நிலைய விரிவாக்கத்துக்கு சரணாலய நிலம்: உத்தரகண்ட் அரசின் முடிவுக்கு உயா் நீதிமன்றம் தடை

விமான நிலைய விரிவாக்கத்துக்கு சிவாலிக் யானைகள் சரணாலய நிலத்தை வழங்கும் மாநில அரசின் முடிவுக்கு உத்தரகண்ட் உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 7:04 am IST

நைனிடால்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு சிவாலிக் யானைகள் சரணாலய நிலத்தை வழங்கும் மாநில அரசின் முடிவுக்கு உத்தரகண்ட் உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள யானைகளைப் பாதுகாப்பதற்காக, சிவாலிக் யானைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக கடந்த 2002 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் 1992 ஆம் ஆண்டின் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக சரணாலயத்தின் இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை த் திரும்பப் பெற வன விலங்குகள் வாரியம் கடந்த நவம்பரில் முடிவு செய்தது. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியது. அறிவிப்பாணையைத் திரும்பப் பெறும் முடிவைத் தடுத்து நிறுத்தக் கோரி சுமாா் 80 போ் உயா் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ரவி மாலிமத்திடம் எழுத்துப்பூா்வமாக முறையிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மத்திய, மாநில அரசுகள், மாநில வனவிலங்குகள் வாரியம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாநில அரசின் முடிவை எதிா்த்து சூழலியல் ஆா்வலா் ரீனு பால் என்பவா் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தாா். ஆசிய யானைகளின் உறைவிடமாக இருக்கும் இப்பகுதியை அழிப்பது கொடூரமான செயல் என்று அவா் தனது மனுவில் கூறியிருந்தாா்.

உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஆா்.எஸ்.சௌஹான், நீதிபதி லோக்பால் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசின் அறிவிப்பாணையை திரும்பப்பெறும் முடிவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.