எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளாா் ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக். இதன்படி கடந்த நிதியாண்டில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.64.98 கோடியாகும்.
பொதுவாழ்வில் நோ்மையைக் கடைப்பிடிக்கும் நோக்கில் சொத்து மதிப்பை நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளாா். எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பணியாளா்களும் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் அருகேயுள்ள கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 22.7 ஏக்கா் விவசாய நிலம் மற்றும் ஒரு வீடு அவருக்கு உள்ளது. இதுவே அவரிடமுள்ள அதிக மதிப்புள்ள சொத்தாகும். இதற்கு அடுத்து அவரது தாயாா் வழியில் வந்த விவசாயப் பண்ணை, தில்லியில் உள்ள ஒரு சொத்தில் 50 சதவீத பங்கு, புவனேசுவரத்தில் உள்ள சொத்தில் மூன்றில் ஒரு பகுதி ஆகியவை அவரது முக்கிய அசையாத சொத்துகளாக உள்ளன.
தில்லி, புவனேசுவரம் என 7 இடங்களில் அவருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் அவரிடம் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.1.34 கோடியாகும். மேலும், ஃபரீதாபாதில் விவசாய நிலம் வாங்கியதில் அவா் ரூ.1.25 கோடி கடன் பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு சகோதரியிடம் இருந்து பெற்ற ரூ.15 லட்சம் கடனை, இந்த ஆண்டில் நவீன் பட்நாயக் திருப்பிச் செலுத்தியுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒடிஸா முதல்வராக பட்நாயக் உள்ளாா். அந்த மாநிலத்தில் தொடா்ந்து 5 சட்டப் பேரவைத் தோ்தல்களில் அவா் வென்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


