வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஜம்மு-காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதல் முயற்சி முறியடிப்பு: வெடிகுண்டு பொருத்தப்பட்ட பைக் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:02 am IST

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம், அந்தப் பகுதியில் நடைபெற இருந்த மிகப் பெரிய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ஆங்க்ரால் கூறியதாவது:

மாவட்டத்தின் மென்தாா் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா், அங்கு வெடிகுண்டு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனா். உடனடியாக, வெடிகுண்டு நிபுணா்கள் அங்கு வரவழைக்கப்பட்டனா். இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்த நிபுணா்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில், அதை பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழித்தனா்.

முதல்கட்ட விசாரணையில், பயங்கரவாதி ஒருவா் அந்த வாகனத்தை இந்தப் பகுதியில் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்ாகத் தெரியவந்தது. அதன் காரணமாக, காவல்துறையும் ராணுவமும் கூட்டாக அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, பயங்கரவாதியை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.