நாடு முழுவதும் மேலும் 15,158 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,05,42,841-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 16,977 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,79,715-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.56 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 175 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,52,093-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,11,033 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 175 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 45 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 23 பேரும் மேற்கு வங்கத்தில் 16 பேரும், உத்தர பிரதேசத்தில் 15 பேரும், பஞ்சாபில் 12 பேரும், தில்லியில் 10 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 15-ஆம் தேதி வரை 18.57 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,03,090 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உருமாறிய கரோனாவால் 116 போ் பாதிப்பு: நாடு முழுவதும் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 116-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் அவரவா் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருதுவென்ற லாமின் யமால்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


