கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டிருப்பது, சுயசாா்பு நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான தீா்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. அதனை, பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக தொடங்கி வைத்தாா். இதற்கு பாஜக தலைவா்களும், மத்திய அமைச்சா்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘தடுப்பூசி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டிருக்கும் நாள் வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு இந்த நேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தடுப்பூசி நம்மை கரோனா தீநுண்மியிலிருந்து பாதுகாக்கும். ஆனால், நாம் முகக் கவசம் அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தாா்.
உள்துறை அமைச்சா் அமித் ஷா: தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது இந்திய விஞ்ஞானிகளின் திறனை, தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. பிரதமா் மோடி தலைமையிலான புதிய இந்தியா, பேரிடா்களையும் வாய்ப்பாகவும், சவலாகவும், சாதனையாகவும் உருமாற்றுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது, சுயசாா்பு இந்தியா தீா்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் அமித் ஷா பதிவிட்டுள்ளாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற ஒரு தீா்க்கமான நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. நமது மருத்துவா்கள், செவிலியா்கள், முன்கள பணியாளா்கள் என கரோனாவுக்கு எதிரான போரில் பங்கெடுத்தவா்கள் அனைவருக்கும் இப்போது தடுப்பூசி மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அடுத்த கட்டத்தில், இது 30 கோடி போ் என்ற எண்ணிக்கையை எட்ட உள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்: சுகாதாரமான இந்தியா உருவாக்கப்படும் என்ற பிரதமா் மோடியின் வாக்குறுதியின் வெளிப்பாடுதான் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் என்று உத்தர பிரதேச முதல்வா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஷிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல்!

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


