மேற்கு வங்கத்தை துண்டாட முயற்சிக்கும் பாஜக: மம்தா தாக்கு
மேற்கு வங்கத்தை துண்டாட பாஜக முயன்று வருவதாக திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்தை துண்டாட பாஜக முயன்று வருவதாக திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை வடக்கு பர்கானாஸில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார்.
மேற்குவங்கத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் பண்பாட்டை சிதைக்கும் வேலையை பாஜக செய்து வருவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
மேலும் மேற்கு வங்கத்தை துண்டாட பாஜக தொடர்ந்து முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...